11 இராமேசுவரம் மீனவர்கள் இலங்கையால் கைது!

இலங்கையில் இராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது
இலங்கையில் இராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது
Published on

இராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் இலங்கைக் கடலுக்குள் சென்று மீன்பிடித்ததாக அந்நாட்டுக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 11 பேரையும் அவர்கள் பயன்படுத்திய ஒரு படகுடன் இலங்கைக் கடற்படையினர் இன்று காலையில் பிடித்துச்சென்றனர்.

இவர்கள் அனைவரும் முதலில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கிருந்து, இலங்கை கடல் தொழில், நீரியல் வளங்கள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அங்கு விசாரிக்கப்பட்ட பின்னர், இம்மீனவர்களை நீதிமன்றத்தில் கொண்டுநிறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என யாழ்ப்பாண ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com