1.2 கோடி பேரில் 37ஆயிரம் பேருக்குதான் நிரந்தர வேலை- நிழல் பட்ஜெட்!

1.2 கோடி பேரில் 37ஆயிரம் பேருக்குதான் நிரந்தர வேலை- நிழல் பட்ஜெட்!
Published on

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 1.20 கோடி பேர் காத்திருக்கும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 70,000 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களில் 37,026 பேருக்கு மட்டுமே நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது; 33,655 பேருக்கு தற்காலிக, ஒப்பந்தப் பணிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன; இது போதுமானதல்ல என்றும் பா.ம.க.வின் நிழல் நிதியறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பா.ம.க.வின் சார்பில் 23ஆவது ஆண்டாக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று  வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு, கட்சித் தலைவர் அன்புமணி ஆகியோர் வெளியிட்டனர். 

மொத்தம் 108 தலைப்புகளில் அறுபது பக்கங்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பா.ம.க. ஆட்சிக்கு வந்திருந்தால் என்னென்ன செய்யும் என்கிறபடி அந்தக் கட்சியின் நிழல் நிதியறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com