14-02-2026 காலை தலைப்புச்செய்திகள்

Published on

1. தமிழகத்துக்கு சிறப்புதேர்தல் பார்வையாளராக முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி பிரதாப் சிங் நியமனம்

2. இரண்டு நாள் பயணமாக திருச்சிக்கு வந்தார் மைய உள்துறை அமைச்சர் அமித்ஷா

3. தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர் பயிற்சி மாநாட்டுக்காக, ஜோலார்பேட்டைக்கு இரயிலில் புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

4. நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. போதையில் ஓட்டினாரா என விசாரணை. 

5. திருச்சி நா.த.க. மாநாட்டுக்காக வீட்டுக்குவீடு அழைப்பிதழ் வைத்தார், சீமானின் தாயார். 

6. இன்றும் நாளையும் பகல் நேர வெப்பநிலை கூடும்- சென்னை வானிலை மையம்

7. பிப்.18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

8. த.வெ.க. நிகழ்வில் உயிரிழந்தவர் குடும்பம் இந்த மண்ணை நம்பி வந்தது; அவர்களுக்கு நாம் அனைவரும் ஆதரவாக இருக்கவேண்டும்- ம.நீ.ம. இளைஞரணிச் செயலாளர் கவிஞர் சினேகன்  

logo
Andhimazhai
www.andhimazhai.com