16ஆம் தேதி துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை!

முதல்வர் ஆலோசனை
முதல்வர் ஆலோசனை
Published on

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை தமிழ்நாட்டு அரசே தேர்ந்தெடுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதைச் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 

அவர் தலைமையில் நாளைமறுநாள் 16.04.2025 அன்று மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக அரசுச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஆளுநர் இரவி கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கு அரசமைப்புச்சட்ட விதி 142இன்படி ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்தனர். 

அது கடந்த 11ஆம் தேதி தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அப்போதிருந்தே அது நடைமுறைக்கு வந்துவிட்டது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com