18-11-2025 காலை தலைப்புச் செய்திகள்

Published on
  1. கோவையில் பிரதமர் மோடி நாளை இயற்கை விவசாயிகள் மாநாட்டைத் தொடங்கிவைக்கிறார். 

  2. பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் இன்று விடுப்பு எடுத்து போராட்டம்.

  3. கன மழை காரணமாக புதுவை, காரைக்கால் (ஒன்றியப்) பகுதிகளில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.  

  4. பாட்னா காந்தி மைதானத்தில் 20ஆம்தேதி பதவியேற்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பிரதமர் மோடியும் பங்கேற்பு. 

  5. சென்னையில் வாக்குச்சாவடிகளில் 25ஆம் தேதிவரை சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்துகொள்ள ஏற்பாடு.

  6. தில்லி கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது; அமித்ஷா மீண்டும் எச்சரிக்கை. 

  7. அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்- வரும் 22ஆம் தேதி தொடங்கி டிச.20இல் முடிவடையும்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com