
1. முரசு புயல் காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் திருவள்ளூரில் பள்ளிகளுக்கும் விடுமுறை.
2. சென்னைக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள முரசு புயல்; இன்றிரவு கரையைக் கடக்கும் என கணிப்பு!
3. செஞ்சி சிறுமி மாயமாகி 22 நாள்கள் ஆகியும் துப்பு கிடைக்காமல் இழுக்கும் விசாரணை.
4. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
5. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு. விலை: ஒரு கிராம்- 12, 775 ரூபாய், சவரன் : 1,02,200 ரூபாய்.
6. மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல். பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் அறிவிப்பு வெளியிட்டதை ஏற்காமல் ஊழியர்கள் போராட்டம்.
7. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டுத் திருமணத்தில் வைதீக சடங்குகள்... முன்னாள் எம்.பி. செந்தில் உட்பட கட்சிக்கு உள்ளேயே பலரும் கடும் விமர்சனம்!