சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் (மாதிரிப்படம்)
கொரோனா வைரஸ் (மாதிரிப்படம்)
Published on

சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது 3 பேரும் நலமுடன் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com