3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது!

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது!
அர்ஜூனா விருது
Published on

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் உட்பட 32 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கும் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மணிசா இராமதாஸ் ஆகியோரே இந்த முறை இவ்விருதைப் பெறும் தமிழ்நாட்டவர் எனும் பெருமையைத் தட்டிச்சென்றுள்ளனர்.

வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருதை தடகளத்தின் சுச்சா சிங்கும் பாரா நீச்சலின் முரளிகாந்த் ராஜாராம் பெட்கரும் பெறுகின்றனர்.

துரோணாச்சார்யா விருதை விளையாட்டுப் பயிற்சியாளர்கள் சுபாஷ் ராணா -பாரா துப்பாக்கி சுடுதல், தீபாலி தேஷ்பாண்டே - துப்பாக்கி சுடுதல், சந்தீப் சங்வான் -ஆக்கி, வாழ்நாள் சாதனை விருதை பயிற்சியாளர்கள் எஸ் முரளிதரன் - பூப்பந்து, அர்மாண்டோ அக்னெலோ கோலாகோ - கால்பந்து ஆகியோர் பெறுகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com