செய்திகள்
இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் உட்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக மாநில அரசு நியமித்துள்ளது.
1. சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
2. வீர முத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி,
3. மணி கோ. பன்னீர்செல்வம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இணைப் பேராசிரியர்,
4. முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் கே. கோபால் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழக அரசின் அரசிதழில் இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.