டிஜிபி சங்கர் ஜிவால்
செய்திகள்
40 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்! - சங்கர் ஜிவால் உத்தரவு
தமிழகத்தில் 40 காவல் துணைக் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரக் காவல்துறையின் எம்கேபி நகர் சரக காவல்துறை உதவி ஆணையராக உள்ள மணிவண்ணன் மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராகவுள்ள காவ்யா, மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கோவை சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன், சேலம் காவல் உதவி ஆணையர் செல்வம், தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஎஸ்பி பண்டாரசாமி, சென்னை திருமங்கலம் உதவி ஆணையர் பிரம்மானந்தன் உள்ளிட்டோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.