செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் 40 சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவிலிருந்தே இது நடைமுறைக்கு வந்துவிட்டது.
மாநிலத்தில் 5,381 கிலோ மீட்டர் தொலைவுகொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன.
இதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு அதாவது 40 சுங்கச்சாவடிகளில் முன்னர் உள்ள கட்டணத்தில் இன்று முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வண்டிகளுக்கு ஏற்ப 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வை பல தரப்பினரும் கண்டித்தபோதும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.