நாடளவில் தென்னை மரங்களின் விளைச்சல் குறித்த விவரங்களை இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2021-24.ஆம் ஆண்டு காலகட்டத்தில் 726 கோடி தேங்காய்களை விளைவித்து கர்நாடக மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்துக்கு வந்துள்ள தமிழ்நாடு 578 கோடி தேங்காய்களை விளைவித்துள்ளது.
நாட்டிலேயே தென்னைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற கேரள மாநிலம் மூன்றாவது இடத்திற்கே வரமுடிந்துள்ளது.
அந்த மாநிலம் மொத்தம் 564 கோடி தேங்காய்களையே உற்பத்தி செய்துள்ளது என்று தென்னை வளர்ச்சி வாரியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலம் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்துவந்தது.
கடந்த 2022- 23ஆம் ஆண்டில் கேரளம் 563 கோடி தேங்காய்களை விளைவித்திருந்த நிலையில், அதைவிடக் கூடுதலாக கர்நாடகா 32 கோடி தேங்காய்களை (595 கோடி தேங்காய்களை) உற்பத்திசெய்து முதலிடத்துக்கு வந்தது.