செய்திகள்
மீன்வளத்தைப் பெருக்குவதற்காக ஆண்டுதோறும் இரண்டு மாதங்கள் கடல் மீன் பிடியில் கட்டுப்பாடு விதிக்கப்படும். இதில் விசைப்படகுகள் மீன்பிடிக்க முழுவதுமாகத் தடை விதிக்கப்படும்.
மொத்தம் 61 நாள்கள் விதிக்கப்படும் இந்தத் தடைக் காலத்தில் மீன்வளம் பெருகும் என்பதால், தொழில் கட்டுப்பாடாக மீனவர்களும் இதை நீண்ட காலமாகக் கடைப்பிடித்துவருகிறார்கள்.
இன்று ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதிவரை இந்தத் தடைக் காலம் நடைமுறையில் இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் விசைப் படகுகளுக்கு மட்டும்தான் தடையே தவிர, நாட்டுப் படகுகள், வள்ளங்களைப் பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் வழக்கம்போல மீன்பிடியில் ஈடுபடலாம்.
மீன்பிடித் தடை தொடங்கியுள்ள நிலையில், பரவலாக மீன்களின் விலை உயரும் என்பதும் தவிர்க்கமுடியாததாகிறது.