மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில்தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில், கடந்த மார்ச் 28ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், மியான்மரில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தால் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 1700க்கும் மேற்பட்டோர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, பல ஆயிரம் பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு, பலி எண்ணிக்கை பல மடங்கு உயரும் என கணித்துள்ளது.
இந்நிலையில், இன்று மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.