2024-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்முறை பல முக்கிய விருதுகளை வென்று தமிழ் சினிமா தலைநிமிர்ந்துள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்துக்கு சிறப்பு விருது (Special Mention) அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு தேசிய விருது தனுஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி இசைக்கான ‘அமரன்’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவிக்கு இது மூன்றாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது சச்னா நமிதாஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே மகாராஜா படத்துக்காக தேசிய அளவில் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் விருதை அனல் அரசு வென்றிருக்கிறார்.
சிறந்த இயக்குநருக்கான விருது ‘அமரன்’ படத்துக்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுக்கான படமாக ‘கேப்டன் மில்லர்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது