செய்திகள்
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவிவரும் போர்ப் பதற்றத்தில் இஸ்ரேல் முதலில் நடத்திய தாக்குதலில் 78 பேர் இறந்துவிட்டதாகவும் 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரானின் அதிபர் மாளிகைப் பகுதியைச் சுற்றிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணைகளை ஈரான் வழிமறித்து தாக்கி அழித்துள்ளதாக டெக்ரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பதிலுக்கு ஈரான் தரப்பும் இஸ்ரேல் மீது இரண்டாவதாக இன்றும் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஈரானின் தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.
டெல் அவிவ், இரமாத்கான், ஜெருசலேம் ஆகிய நகரங்கள் மீது ஈரானின் தாக்குதல் தொடர்ந்தது. இதில் இரமாத் கானில் இரண்டு பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.