இந்தியாவில் 88 சதவீத மக்களுக்கு சிறிய காரை வாங்குவதற்குக்கூட வசதியில்லை என மாருதி சுசுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்துள்ளார்.
இந்தியா பொருளாதார அளவில் நாளுக்கு நாள் முன்னேறி வந்தாலும் கூட இன்னும் வறுமை, ஏழ்மை நிலை பல மக்களுக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. மக்கள் பலர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை கடன்களின் மூலமே பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் விதவிதமாக கார்கள் வைத்திருப்பது போக, நடுத்தர மக்கள் பலரும் வங்கி கடனில் கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், இந்தியர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே கார் வாங்குகிறார்கள் என மாருதி சுசுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா.
இதுகுறித்து பேசிய அவர் “இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் 12% பேர் மட்டும்தான் கார்களை வாங்குகிறார்கள். மீதமிருக்கும் 88 சதவீத மக்களால் ஒரு சிறிய ரக காரைக் கூட வாங்க முடிவதில்லை. அவர்களுக்கு அதற்கான சக்தி இல்லை. இதனால் இந்தியாவில் சிறிய ரக பட்ஜெட் கார்களின் விற்பனை 9சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
மத்திய அரசு வழங்கியுள்ள வருமான வரிச்சலுகை கார் விற்பனையை அதிகரிக்குமா என்று தெரியாது. ஏனெனில், காரின் விலை சராசரியாக 80 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம் வரை வரை உயர்ந்துள்ளது.” என்றார்.