பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனை சக மாணவனே வெட்டிய சம்பவம் நெல்லையில் மீண்டும் அரங்கேறியுள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தில் சிறப்பான இடத்தைப் பெற்ற பள்ளிகளில் ஒன்று. இங்கு படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனை கூர்மையான அரிவாளைக் கொண்டு தாக்கியிருக்கிறான்.
காயம்பட்ட மாணவனுக்கு தலையில், கழுத்தில், தோள்பட்டையில் என மூன்று இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தடுக்கவந்த ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டி விழுந்துள்ளது.
காவல்துறையினர் அங்குவந்து வெட்டிய மாணவனைப் பிடித்துச்சென்றுள்ளனர்.
காயம்பட்ட மாணவனும் ஆசிரியரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரி, கடந்த மாதத்தில் திருவைகுண்டம் ஆகிய ஊர்களில் மாணவர்கள் மீது சாதிய வன்கொடுமைத் தாக்குதல் நடத்தப்பட்டு நாடளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தொடர்ந்து சாதிரீதியான தாக்குதல் ஏவப்பட்டிருப்பது தென்கோடி மாவட்டங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.