தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறுவாணி தண்ணீர்போல் சுத்தமாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியுள்ளார்
கோவையில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
“நேற்று நான் பேசியபோது, இந்த கருத்தரங்கம் வெறும் ஓட்டுக்காக மட்டுமே நடத்தவில்லை என்று சொன்னேன். தவெக வெறும் அரசியல் ஆதாயத்துக்காகத் தொடங்கப்பட்ட கட்சி இல்லை. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுவோம். அதற்குத் தயங்க மாட்டோம்.
நம்முடைய ஆட்சி சிறுவாணி தண்ணீர்போல் தவெக ஆட்சி சுத்தமாக இருக்கும். நம் அரசில் ஊழல் மற்றும் குற்றவாளிகள் இருக்கமாட்டார்கள். எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வாக்குச் சாவடி முகவர்கள் மக்களை சென்று சந்தியுங்கள்.
தவெகவின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக இருக்கும். இதை மக்களிடம் சென்று சொல்லுங்கள். நமக்கு ஓட்டுப்போடுகிற மக்கள் கொண்டாட்டமாக வந்து வாக்களிக்க வேண்டும். நீங்கள்தான் இதற்கு முதுகெலும்பே. உறுதியாக இருங்கள் நல்லதே நடக்கும்.” என்று கூறினார்.