சென்னை வந்த விமானம் மீது லேசர் ஒளி.. சுதாரித்த விமானி.. பரபரப்பான ஏர்போர்ட்!

சென்னை வந்த விமானம் மீது லேசர் ஒளி.. சுதாரித்த விமானி.. பரபரப்பான ஏர்போர்ட்!
Published on

துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நேற்றிரவு சென்னை விமானநிலையத்தை நோக்கி வந்தது. விமானம் தரையிறங்கும் போது, பரங்கிமலை பகுதியிலிருந்து பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டது. இதனால், சில நொடியிலேயே விமானத்தை உயரப் பறக்க செய்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டு, லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது பீச்சி அடிக்கப்படுவதால், தரையிறங்க முடியவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது. உடனே விமான பாதுகாப்பு பிரிவினருக்கும், சென்னை ஏர்போர்ட் போலீசுக்கும் தகவல் தந்தனர். பிறகு, அந்த ரேடர் ஒளி எங்கிருந்து வந்தது? என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த ஒளி நின்றுவிட்டது.

பின்னர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதற்கு பிறகு வந்த விமானங்களும் எந்த பிரச்சனையுமில்லாமல் தரையிறங்கின.

ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம் அதிகாரிகளும், போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள். பரங்கிமலை, நந்தம்பாக்கம், கிண்டி போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தரப்பட்டதால், அவர்களும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com