ஒரே மாதத்தில் 2000க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம்… எந்த நாட்டில்?

டோகரா தீவுக்கூட்டம்
டோகரா தீவுக்கூட்டம்
Published on

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத டோகரா தீவுக் கூட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பல கண்டத்தகடுகள் சந்திக்கக்கூடிய இடத்தில் அமைந்திருப்பதால், ஜப்பான் உலகில் அதிக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில், தெற்கு ஜப்பானில் டோக்ரா தீவுக்கூட்டத்தில் மொத்தமாக 12 தீவுகள் உள்ளன. அதில் ஏழு தீவுகளில் சுமார் 700 பேர் வசிப்பதாக கூறப்படுகிறது. மீதி ஐந்து தீவுகளில் மனித நடமாட்டம் இல்லை.

அந்த தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்தான் என்றாலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அதாவது ஜூன் 21லிருந்து ஜூலை 28ஆம் தேதி வரை 2171 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை 3 ஆம் தேதி மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், இதில் அகுசெகிஜிமா தீவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் அதிகப்படியான நில அதிர்வை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 308 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 2023 செப்டம்பரில் 346 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும்தான் இவ்வளவு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த தீவுகளில் உள்ள மக்கள் எப்போதும் பீதியுடனே இருப்பதாக கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com