மறைந்த நடிகர் மதன் பாப்பின் இறுதிச்சடங்கு இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
தமிழ், மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மதன்பாப் தனது தனித்துவமான சிரிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
சென்னையில் 1953 ஆம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். தேவர் மகன், பிரண்ட்ஸ், வில்லன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மணியளவில் உயிரிழந்தார்.