செய்திகள்
பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராஜேஷ். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.
45 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த நடிகர் ராஜேஷ், இன்று உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடைய மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.