விபத்தில் சிக்கிய நடிகர் குடும்பம்... தந்தை பரிதாப பலி!

விபத்தில் சிக்கிய நடிகர் குடும்பம்... தந்தை பரிதாப பலி!
Published on

நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் வெள்ளிக்கிழமை காலை பலியானார். மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சைன் டாம் சாக்கோ தனது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்றிரவு காரில் புறப்பட்டுள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் தருமபுரி அருகே பள்ளக்கோட்டை பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

காரின் மையப்பகுதியில் அமர்ந்திருந்த டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ விபத்தில் பலியானார். நடிகர் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் டாம் சாக்கோவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சைன் டாம் சாக்கோ, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com