'கோட்' மோதிரத்துடன் நடிகர் விஜய்… வைரலாகும் புகைப்படம்!

கோட் மோதிரத்துடன் நடிகர் விஜய்
கோட் மோதிரத்துடன் நடிகர் விஜய்
Published on

நடிகர் விஜய் 'கோட்' என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி கடந்த மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தி கோட். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 440 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 'தி கோட்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், நடிகர் விஜய் 'கோட்' என்ற மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மோதிரத்தை மோதிரத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா விஜய்க்கு பரிசளித்ததாக கூறப்படுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com