ஜெயம் ரவியைத் தொடர்ந்து பெயரை மாற்றிய நடிகர்!

கெளதம் கார்த்திக்
கெளதம் கார்த்திக்
Published on

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளார்.

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, பத்துதல உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் ஆர்யாவுடன் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அறிவிப்பு போஸ்டரில் இவரின் பெயர் கெளதம் ராம் கார்த்திக் என இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக் கொண்டுள்ளார்.

முன்னதாக ஜெயம் ரவி தன்னுடைய பெஉஅரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com