ஓ. பன்னீர்செல்வம்
ஓ. பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு; அடுத்தகட்ட நகர்வை கூறிய ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து தேனி பெரியகுளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது,”அ.தி.மு.க. தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இயக்கத்தின் அடிநாதமாக இருக்கின்ற தொண்டர்களின் கருத்தை அறிந்து எங்களின் முடிவை அறிவிப்போம். அதேபோல், பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.” என்றவரிடம் கனகராஜ் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் என்றால் வழக்குத் தொடருவேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “கொடநாட்டில் என்ன நடந்தது என்பது பற்றி தமிழக மக்களுக்குத் தெரியும். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முடிவு தமிழக மக்களின் எண்ணப்படி வரும்.” என்றவர், மதுரை மாநாடு புளியோதரை கதையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com