மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்… இருந்தாலும் அவர் செய்த காரியத்தை பாருங்க…!

விபத்தில் சிக்கிய அஜித்
விபத்தில் சிக்கிய அஜித்
Published on

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

சிறு வயதிலிருந்தே ரேஸ் மீது பிரியம் கொண்ட அஜித்குமார் பைக், காரில் ரேஸ் செல்ல விருப்பப்படுவார். ஒவ்வொரு திரைப்படம் முடியும் போது ஒரு லாங் டிரைவ் பைக்கில் சென்று வருவார். அந்த வகையில் சமீப நாட்களாக அஜித்குமார் கார் ரேசில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தநிலையில், இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது.

பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியது. விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது. காரிலிருந்து வெளியே வந்த அஜித் குமார், சற்றும் தயங்காமல் உடைந்தபோன காரின் பாகங்களை பொறுக்கி தூரம் போடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கார் பந்தயத்தில் அவ்வப்போது அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com