வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: தடையில்லா சான்றை வெளியிட்ட நயன்தாரா!

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா
Published on

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதற்காக பெறப்பட்ட தடையில்லா சான்றிதழை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' திரைப்படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், அதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரூ. 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

இதனால், நயன்தாராவின் ஆவணப்படம் குறித்த சர்ச்சை மீண்டும் வெடித்த நிலையில், இது குறித்து பெற்ற தடையில்லா சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நெட்ஃப்ளிக்ஸில் வெளியான நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் காட்சிகளை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி கேட்டு படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com