Nayanthara: Beyond the fairy tale
நயன்தாரா

நயன்தாரா ஆவணப்படத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு!

Published on

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்ன உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் நயன்தாரா; பியாண்ட் தி பேரி டேல்'(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, அதில் நானும் ரவுடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இது தொடர்பாக தனுஷின் வுண்டர்பார்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சந்திரமுகி காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஏபி இண்டர்நெஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com