மீண்டும் விண்வெளி விபத்து… 7 பேர் பலி!

உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து
உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து
Published on

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர், கௌரிகுன்ட் - சோன்பிரயாக் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலை காரணமாக, இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். இந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானி, குழந்தை உள்பட 7 பேரும் பலியாகினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். இந்த விபத்துக்கு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், ஜூன் 12 ஆம் தேதியில் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 270-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது இந்த துரதிருஷ்டமான சம்பவம் மேலும் கவலை அளிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com