செய்திகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதும் வெவ்வேறு மொழி படங்களுக்கும், ஆல்பங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, அகடமி விருது, கோல்டன் குளோபல் விருது மற்றும் தேசிய விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளன.