ஆசிய கோப்பை டி20: இந்திய அணி அறிவிப்பு!

சூரிய குமார் யாதவ் - சுப்மன் கில்
சூரிய குமார் யாதவ் - சுப்மன் கில்
Published on

ஆசிய கோப்பைக்கான இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய குமார் யாதவ் அணித்தலைவராகவும் ஷூப்மன் கில் துணை கேப்டனாகவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை டி-20 தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் விளையாடுவதற்கு வீரர்களை தேர்வு செய்யும் கூட்டம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் தலைமையில் நடந்தது.

இதன் முடிவில் தேர்வு செய்யப்பட்ட சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பெயர் பின்வருமாறு:

சூர்ய குமார் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் தூபே, அக்சர் படேல், ஜித்தேஷ் ஷர்மா, பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

logo
Andhimazhai
www.andhimazhai.com