சட்டப்பேரவை: கருப்பு சட்டையில் வந்த அதிமுக உறுப்பினர்கள்!

கருப்பு சட்டையில் வந்த அதிமுக உறுப்பினர்கள்
கருப்பு சட்டையில் வந்த அதிமுக உறுப்பினர்கள்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளே பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஆளுநர் விவகாரம், அதிமுகவின் வெளிநடப்பு விவாதத்தை கிளப்பியது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எதிர்ப்பை பதிவும் செய்யும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டைகளில் 'யார் அந்த சார்?' என்ற பேட்ஜை அணிந்து வந்தனர்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கினர்.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com