செய்திகள்
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதலமைச்ச ரேகா குப்தாவை கன்னத்தில் அறைந்து தலைமுடியை இழுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, முதலமைச்சர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல் நடத்தியவர் யார்? என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு டெல்லி மாநில பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.