நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு… 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக எம்.பி.க்கு விருது!

சி.என். அண்ணாதுரை எம்.பி.
சி.என். அண்ணாதுரை எம்.பி.
Published on

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது அறிவித்துள்ளது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சிறந்த பங்காற்றியவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் (NCBC) தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையிலான நடுவர் குழு அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் 16 மற்றும் 17-வது மக்களவையில் சிறந்த பங்காற்றியதற்காக 17 எம்.பி.களுக்கு சன்சத் ரத்னா தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறும் எம்.பிக்களின் பட்டியல் பின்வருமாறு:

1. பருத்ஹரி மஹ்தாப்- பிஜு ஜனதா தளம்

2. சுப்ரியா சுலே - தேசியவாத காங்கிரஸ் – சரத்பவார்

3. என்.கே.பிரேமச்சந்திரன் - சமூகப் புரட்சிக் கட்சி

4. ஸ்ரீரங் அப்பா பர்னே - சிவசேனை

5. ஸ்மிதா வாக் -பாஜக

6. அரவிந்த் சாவந்த் - சிவசேனை - உத்தவ் தாக்கரே

7. நரேஷ் கண்பத் மாஸ்கே – சிவசேனை

8. வர்ஷா கெய்க்வாட் - காங்கிரஸ்

9. மேதா குல்கர்னி - பாஜக

10. பிரவீன் படேல் - பாஜக

11. ரவி கிஷன் – பாஜக

12. நிஷிகாந்த் துபே - பாஜக

13. பித்யூத் பரன் மஹாதோ – பாஜக

14. பி.பி.சௌத்ரி - பாஜக

15. மதன் ராத்தோர் – பாஜக

16. சி.என்.அண்ணாதுரை – திமுக

17. திலீப் சைக்கியா - பாஜக

மேலும், இரு நிரந்தரக் குழுக்களான நிதி மற்றும் விவசாயத் துறைகளுக்கும் சிறந்த செயல்திறனுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com