சிபில் ஸ்கோர் இல்லாமலே பேங்க் லோன்! - உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்!

சிபில் ஸ்கோர் இல்லாமலே பேங்க் லோன்! - உங்களுக்குத்தான் இந்த குட் நியூஸ்!
Published on

வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும் கடன் பெறுவோரின் பின்னணியை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டு என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

வங்கிகளில் இருந்து தனிநபர் கடன், நகைக்கடன், வீடு உள்ளிட்ட பிற வங்கிக்கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ எனப்படும் 3 இலக்க எண் கோரப்படுகிறது.

தனிநபரின் கடன்தகுதியை நிர்ணயிக்கும் இந்த மதிப்பெண்ணை இந்திய கடன் தகவல் பணியகம் (சிபில்) வழங்குகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கிகள் கடன் வழங்குகின்றன.

இந்த சிபில் ஸ்கோர் போதுமான அளவு இல்லாததால் பலர் கடன் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக முதல் முறை வங்கிக்கடன் பெற முயற்சிப்போரும் இந்த சிபில் ஸ்கோர் இல்லாமல் கடன் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதைத்தொடர்ந்து முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:

முதல் முறை வங்கிக்கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் பூஜ்ஜியம் அல்லது குறைவாக இருக்கும் காரணத்தை காட்டி, அவர்களுக்கு வங்கிக்கடன் மறுக்கக்கூடாது.

கடன் நிறுவனங்களின் சிறப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் அல்ல என ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதைப்போல கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவும் இல்லை.

ஒழுங்குபடுத்தப்படாத கடன் சூழலில், கடன் வழங்குபவர்கள்தான் தங்கள் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் பரந்த ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தங்கள் கடன் முடிவுகளை எடுக்கிறார்கள்.

முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என்றாலும், அவர்களது நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

அந்தவகையில் அவர்களின் கடன் வரலாறு, கடந்த கால திருப்பிச்செலுத்தும் வரலாறு, தாமதமான திருப்பிச் செலுத்தல்கள், தீர்க்கப்பட்ட கடன்கள், மறுசீரமைக்கப்பட்டவை மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டவை போன்றவற்றை சரி பார்க்க வேண்டும்.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com