''குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும். தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்'' என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடகப்பக்கத்தில்:
“தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்று இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று வரை கட்சியை பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயக்கிக் கொண்டிருந்த அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணாமலை அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் கட்சியை எடுத்துச் சென்றதில் மிக முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல் பா.ஜ.க.வை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன்.
நான் கட்சியில் இணைந்து பார்த்த தலைவர்களின் உழைப்பையும் வழிநடத்துதலையும், இங்கே பதிவு செய்வதன் மூலம் பெருமை அடைகிறேன். நான் நேற்று குறிப்பிட்டதை போல குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும். தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்.
நயினார் நாகேந்திரன் அடித்தளம் அமைப்பார்கள். ஒன்றிணைந்து பணியாற்றுவோம். வெற்றி பெறுவோம். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.” இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.