போதை பிரதீப்புடன் தொடர்பு- பா.ஜ.க. நிர்வாகி விளக்கம்!

வினோஜ் செல்வம், பா.ஜ.க.
வினோஜ் செல்வம், பா.ஜ.க.
Published on

நடிகர் ஸ்ரீகாந்தைக் கைதுசெய்ய வைத்த போதைப்பொருள் விவகாரம் அடுத்த சுற்றில் நடிகர் கிருஷ்ணாவையும் உள்ளே தள்ளியது. இந்நிலையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி வினோஜ் செல்வத்துடன் தொடர்பு இருப்பதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வினோஜின் முகநூல் பக்கத்தில் பிரதீப்புடன் அவர் இணைந்து நிற்கும் படம் ஒன்று பதிவாகியிருப்பது விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. 

இதற்கு விளக்கம் அளித்துள்ள வினோஜ், தானும் பிரதீப்பும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாகப் படித்தவர்கள் என்றும் அந்தப் படம் படித்தபோது எடுக்கப்பட்டது என்றும் அவருடன் தனக்கு ஏழு ஆண்டுகளாகத் தொடர்பே இல்லை என்றும் கூறியுள்ளார். 

இந்த விவகாரத்தில் முதலில் அ.தி.மு.க. நிர்வாகியும் இப்போது பா.ஜ.க. நிர்வாகியும் இணைத்துப் பேசப்படுவது அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com