தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் மாநாடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் நோக்கில் அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்தவுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்து, செப்டம்பர் 13ஆம் தேதி மதுரையிலும், அக்டோபர் 26ஆம் தேதி கோவையிலும், நவம்பர் 23 ஆம் தேதி சேலத்திலும், டிசம்பர் 21ஆம் தேதி தஞ்சாவூரிலும், ஜனவரி 4ஆம் தேதி திருவண்ணாமலையிலும் ஜனவரி 24ஆம் தேதி திருவள்ளூவரிலும் மாநடுகள் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'2026 பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி, அதிமுகதான் ஆட்சி அமைக்கும். நான்தான் முதல்வர் வேட்பாளர்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் "பூத் வலிமை படுத்தும் பயணம்" எனும் தலைப்பில் மாநில பயிலரங்கம், சென்னை, காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய மாநில மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.