அப்துல்ரகுமான் உள்ளிட்ட 5 தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை பெற்றுக் கொண்ட கொ.மா. கோதண்டம்
முதல்வர் ஸ்டாலினிடம் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை பெற்றுக் கொண்ட கொ.மா. கோதண்டம்
Published on

கவிக்கோ அப்துல் ரகுமான், மெர்வின் உட்பட 5 தமிழறிஞர்களின் நூல்களை, தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

தமிழ் அறிஞர்களின் படைப்புகள் உலகம் முழுவதும் சென்று சேர்வதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் 32 அறிஞர்களின் 1442 நூல்களைத் தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.

அந்தவகையில், மொழி வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட, மறைந்த தமிழறிஞர்களான அப்துல் ரகுமான், மெர்வின், பழனி ஆகியோரின் நூல்களும், வாழும் தமிழறிஞர்களான கொ.மா. கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகியோரின் நூல்களும் இந்தாண்டு நாட்டுடைமையாக்கப்பட்டு உள்ளன.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பாரதிதாசன் பிறந்த நாளை ஒட்டி நடந்த தமிழ் வார விழா நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை எழுதிய தமிழ் அறிஞர்களுக்கு தலா ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கி சிறப்பித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com