நிற்காமல் சென்ற அரசு பேருந்து... உயிரை பணயம் வைத்து ஓடிய +2 மாணவி… வைரல் வீடியோ!

பேருந்தின் பின்னால் ஓடிய +2 மாணவி
பேருந்தின் பின்னால் ஓடிய +2 மாணவி
Published on

வாணியம்பாடியில், அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பேருந்தின் படியில் உள்ள கம்பியைப் பிடித்துக்கொண்டு நீண்ட தூரம் ஒடிய காட்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.

அப்போது, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, தொடர்ந்து ஓடியுள்ளார். வெகு தூரம் இப்படி மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், பின்னர் பேருந்தை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி பேருந்து ஏறிச் சென்ற வீடியோ, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com