அரசு சார்பில் 3 நாள் மின்னணு சந்தைப்படுத்தல் பயிற்சி!

அரசு சார்பில் 3 நாள் மின்னணு சந்தைப்படுத்தல் பயிற்சி!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு - புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் சென்னையில், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 28.11.2023 முதல் 30.11.2023 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் மின்னணு முறையின் நுட்பங்கள் - இணையதளத்தை உருவாக்குதல் - சமூக ஊடகத்தின் மூலம் சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், நிலையான மேலாண்மை அமைப்பு சமூக பகிர்வு உளவியல், சமூக ஊடக பகுப்பாய்வு பிராண்டிங் லேபிளிங், வடிவமைத்தல் டொமைன் பெயர் உருவாக்குதல் & ஹோஸ்டிங் - இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் மற்றும் விதிகள், மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை விரிவாக விளக்குவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை)

காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு - புத்தாக்க நிறுவனம்,

சிட்கோ தொழிற்பேட்டை,

பார்த்தசாரதி கோயில் தெரு,

இடிஐஐ அலுவலக சாலை

ஈக்காட்டுத்தாங்கல், சென்னை–600032.

044-22252081/22252082, 8668102600 / 8668100181

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com