இடைக்கால பட்ஜெட்டுக்கு வர்த்தக அமைப்புகள் பாராட்டு!

இடைக்கால பட்ஜெட்டுக்கு வர்த்தக அமைப்புகள் பாராட்டு!

மைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்துள்ள நிதிநிலை அறிக்கையை பல்வேறு வர்த்தக் அமைப்புகளின் நிர்வாகிகளும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர். 

ஃபிக்கி அமைப்பின்தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஜி.எஸ்.கே.வேலு கூறுகையில், கருப்பைப் புற்றுக்கு எதிரான தடுப்பூசியை 9- 14 வயது காலத்தில் செலுத்தும்திட்டத்தை வரவேற்கிறேன்; மகப்பேறு, குழந்தைகள் நலம் ஆகியவை தொடர்பான அனைத்தையும் ஒரே திட்டத்திற்குள் கொண்டுவருவதும் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மெட்ராஸ் வர்த்தக, தொழில் கூட்டமைப்பின் தலைவர் டி.ஆர்.கேசவன், “ அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்திய- மைய கிழக்கு- ஐரோப்பிய வர்த்தகப் பாதை நமது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றாக இருக்கும்; அதைப் பற்றி நிதியமைச்சர் அழுத்தமாகக் குறிப்பிட்டிருப்பது நம்பிக்கையை அளிக்கிறது.” என்று கூறியுள்ளார். 

தென்னிந்திய தொழில், வர்த்தக சபையின் தலைவர் அருண் அழகப்பன், “ இந்த நிதிநிலை அறிக்கையின் முன்வைப்புகளை வரவேற்கிறோம். குறிப்பாக, உட்கட்டமைப்பு, விவசாயம், வானூர்தித்தொழில், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி ஆகியவற்றில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேவையான திட்டங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை, வளர்ச்சிக்கு உகந்ததாகவும் வர்த்தக, பொதுமக்களின் ஆசைகளை நிறைவேற்றக்கூடியதாக அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com