எலான் மஸ்க்
எலான் மஸ்க்

எலான் மஸ்க்கின் இந்தியப் பயணம் தள்ளிவைப்பு... ஏன்?

உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த மாதம் இந்தியாவுக்கு வரவிருந்தது தள்ளிப்போகிறது. 

ஏப்ரல் நான்காவது வாரத்தில் மஸ்க் இந்தியாவுக்கு வருவதை கடந்த மாதம் அவரே உறுதிப்படுத்தியிருந்தார். பிரதமர் மோடியைச் சந்திப்பது அவருடைய பயணத்தின் முக்கிய அம்சமாகவும் இருந்ந்தது. 

இந்த நிலையில் இன்று, டெஸ்லா நிறுவனத்தில் தனக்குள்ள கடப்பாடுகள் காரணமாக இந்தியப் பயணம் தள்ளிப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் இந்தியப் பயணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்புரிமை கிடைக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். அதை அமெரிக்க அரசின் அரசுத் துறையும் அதை ஆமோதித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com