தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: ஒரு சவரன் ரூ. 48, 720-க்கு விற்பனை!

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: ஒரு சவரன் ரூ. 48, 720-க்கு விற்பனை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.48,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தாலும், பெரும்பாலான நாட்களில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது.

அந்தவகையில், சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,090-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,989க்கும், சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,912க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com