தூத்துக்குடி 3ஆம் நாள் வெள்ள பாதிப்பு
தூத்துக்குடி 3ஆம் நாள் வெள்ள பாதிப்பு

தூத்துக்குடி, 3 மாவட்டங்களில் ஜிஎஸ்டி படிவம் தாக்கலுக்கு கெடு நீட்டிப்பு!

தூத்துக்குடி உட்பட்ட நான்கு வெள்ளம்பாதித்த மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர் வரி படிவங்கள் தாக்கல்செய்வதில் காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவு:

“கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையின் கடுமையான பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான விரிவான நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, அதிகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களைக் கொண்டுள்ள வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017-இன் கீழ் நவம்பர் 2023 மாதத்திற்கான GSTR-3B  படிவத்தை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாளினை டிசம்பர் 20, 2023-இல் இருந்து ஜனவரி 10, 2024 வரை  நீட்டித்து  அறிவிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள வருவாய் மாவட்டங்களில் உள்ள வணிகர்கள், நவம்பர் மாதத்திற்கான GSTR-3B படிவத்தினை நீட்டிக்கப்பட்ட ஜனவரி 10, 2024 வரை தாக்கல் செய்வதற்கு தாமதக் கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டியதில்லை.

மேலும், அதிகனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களைக் கொண்டுள்ள வணிகர்கள் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017-இன் கீழ் 2022-23 நிதியாண்டிற்கான படிவம் GSTR-9 மற்றும் படிவம் GSTR-9C ஆகியவற்றினைத் தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள் டிசம்பர் 31, 2023-இல் இருந்து ஜனவரி 10, 2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று வணிகவரித் துறை தெரிவித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com