ஒரே மாதத்தில் 3.3 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை!

Electric Vehicles
மின்சார வாகனங்கள்
Published on: 

நாடளவில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 3.3 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளன.

அதிகரிக்கும் எரிபொருள் விலை, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் மக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். மத்திய அரசும் இதனை ஊக்கப்படுத்தி வருகிறது.

இதைத் தொடர்ந்து, வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் வெவ்வேறு மாடல்களில், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மின்சார வாகனங்களைத் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், செப்டம்பருக்கு முந்தைய மாதங்களும் 3 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்திலும் விற்பனை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதில் 2.07 இலட்சத்திற்கும் மேல் இருசக்கர வாகனங்கள்.

அதிகபட்சமாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் 54,000 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து, கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

இதேபோல, பஜாஜ் நிறுவனமும் 48,400 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அடுத்ததாக, ஏத்தர் 30,500 வாகனங்களையும், ஹீரோ 24,300 வாகனங்களையும், ஓலா 13,450 வாகனங்களையும், கிரீவ்ஸ் 9300 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், டாடா நிறுவனத்தின் 7,340 பயணிகள் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டில் 14,712 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

மகிந்திரா 7,742 பயணிகள் வாகனங்களையும், 5,226 ஜே.எஸ். டபிள்யூ வாகனங்களையும், எம்.ஜி. மோட்டார்ஸ் 5,226 வாகனங்களையும் விற்றுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் வெறும் 6 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த வின்பாஸ்ட் நிறுவனம், நடப்பு ஆண்டு செப்டம்பரில் 2,960 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com