எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தமிழ்நாடு 7.4 பில்லியன் டாலராக உயர்வு!

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தமிழ்நாடு 7.4 பில்லியன் டாலராக உயர்வு!

தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.

கூடுதல் தகவல்… இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்.” என்று பதிவிட்டுள்ளதுடன்,

‘Tamil Nadu accounts 30 % of India’s electronic exports’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் கட்டுரையை இணைத்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com