தங்கத்தின் விலை ஒரே நாளில் 7,600 ரூபாய் குறைந்தது!

Gold Rate
தங்கத்தின் விலை
Published on: 

தங்கத்தின் விலை இன்று காலையிலும் பிற்பகலிலும் சேர்ந்து 7 ஆயிரத்து 600 ரூபாய் அளவுக்குக் குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த மூன்று வாரங்களில் இந்த அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்ததில்லை.

ஈரான் - அமெரிக்க போர் பதற்றத்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கச் செய்த அதேவேளை, குறையவும் தொடங்கியது.

இரு வாரங்களாக ஏறுமுகத்தைவிட இறங்குமுகத்தில்தான் தங்கத்தின் விலை தொடர்ந்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்னர் ஒரே நாளில் 5 ஆயிரத்து 360 ரூபாய் குறைந்தது.

அதைத் தொடர்ந்து, இன்று காலை தங்கம் விலை சவரன் 5,360 ரூபாய் குறைந்தது. பிற்பகலில் மேலும் 2240 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் தங்கம் 12 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலையும் 1,01, 360 ரூபாயாகக் குறைந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com